2026-ல் விஜய் கட்சியுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .
2026-ல் விஜய் கட்சியுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Published on

கோவை,

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு அவினாசி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு இப்போது திறந்து வைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் எல்லாம் வேண்டுமென்ற ஆமை வேகத்தில் நடக்கின்றன. எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. .

அதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்க பணியும் கிடப்பில் இருக்கிறது. வெள்ளலூர் ரூ.168 கோடி மதிப்பீட்டில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் 50% பணிகள் முடிந்த பிறகும் அதை கிடப்பில் போட்டுள்ளார்கள். பொய்யான நிறைவேற்ற முடியாத திட்டங்களையெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது தி.மு.க.அரசு விழிபிதுங்கி நிற்கிறது.என தெரிவித்தார் .

மேலும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமையுமா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ,

தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ளது .தேர்தல் நேரத்தில் தான் இது குறித்து சொல்ல முடியும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com