

சென்னை,
சென்னையில் திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கழக அமைப்பு ரீதியான நிர்வாகிகளை 15 நாட்களில் முழுமையாகத்தேர்வு செய்யும் மாவட்டச்செயலாளர்களுக்கு மிகப்பெரிய கூட்டம் ஒன்று நடத்தி அவர்களுக்கு 5 பவுன் தங்கச்சங்கிலி அணிவிக்கப்படும். பார்க்கலாம் யார் வெல்ல போகிறார் என்று.
நாடாளுமன்றத்தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் தர்ம யுத்தம் தொடரும்.
எம்.ஜி.ஆர். வகுத்த அதிமுக விதிகளை கல் நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்துள்ளனர். சசிகலாவை தரக்குறைவாக பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. காலம் வரும்போது எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை உரியவரிடம் தெரிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்தேர்தலில் அமமுக,பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரை சந்தித்தப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். 3-வது முறையாக மோடியே பிரதமர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.