பனை ஏறும் தொழிலாளிக்கு உதவித் தொகை

உடன்குடி அருகே பனை ஏறும்போது தவறி விழுந்து காயம் அடைந்த தொழிலாளிக்கு எர்ணாவூர் நாராயணன் உதவித் தொகை வழங்கினார்.
பனை ஏறும் தொழிலாளிக்கு உதவித் தொகை
Published on

உடன்குடி:

உடன்குடி ஒன்றியம் வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து செம்புலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஞானசெல்வன் (வயது 50). பனை ஏறும் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனை மரத்தில் ஏறி பதநீர் எடுக்கும்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்போது தனக்கு மருத்துவ உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனை அறிந்து சமத்துவ மக்கள் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், ஞானசெல்வத்திற்கு உதவித்தொகை வழங்கினார். சமத்துவ மக்கள் கழக உடன்குடி ஒன்றிய செயலாளர் மற்றும் உடன்குடி பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com