குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வார இறுதி விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
Published on

தென்காசி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், தற்போது குற்றாலம் மெயின் அருவிக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அதோடு வார இறுதி விடுமுறை என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com