மண்வளத்தை மேம்படுத்த ஏரிகளில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்

விவசாய நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்த ஏரிகளில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
மண்வளத்தை மேம்படுத்த ஏரிகளில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீர் மட்டத்தை அதிகரிக்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்காக தங்களது கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரிக்கவும், தமிழக அரசால் விலையில்லாமல் விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த நீர் நிலைகளின் விவரம், புலஎண் மற்றும் அகற்ற முடிவு செய்துள்ள கனிமத்தின் அளவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக விவரங்கள் பெறப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு ஒருமுறை

அதனடிப்படையில் நஞ்சைநிலம் ஏக்கர் ஒன்றுக்கு-75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடுகள்), புஞ்சைநிலம் ஏக்கர் ஒன்றுக்கு-90 கனமீட்டர்(30 டிராக்டர் லோடுகள்), வீட்டு பயன்பாட்டுக்கு 30 கனமீட்டர்(10 டிராக்டர் லோடுகள்), மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு-60 கனமீட்டர்(20 டிராக்டர் லோடுகள்) அளவுக்கு வண்டல்மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ளலாம். விவசாய நிலங்களுக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் கிராம கணக்குகளுடன் கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை மற்றும் அடங்கல் சான்றுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com