மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு  மாற்றுப்பணி: தமிழக அரசு உத்தரவு
Published on

தமிழகத்தில் தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, பேருந்து நிலையம், வழிபாட்டு தளங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகளை மூடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 717 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த ஊழியர்களுக்கு வேலை இழக்கும் நிலையானது உருவானது இந்த நிலையில் மாற்றுப்பணி வழங்க விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு கல்வி நிலையங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 கடைகளில் கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரப்பிட செய்யப்படவேண்டும் .

மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரப்ப செய்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com