மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

சேரன்மாதேவியில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
Published on

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் தனியார் மண்டபத்தில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாற்றுக்கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ராஜவேலு, வக்கீல் அஸ்வின், விவசாய அணி மாவட்ட தலைவர் பெரிய முருகன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் இசக்கார் ராஜபால், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com