நயினார் நாகேந்திரன் முன்னிலையில் மாற்று கட்சியினர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி 125 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அவருடைய உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலை கழக துணைவேந்தருமான சர் அசுதோசு முகர்சி - ஜோகமாயா தம்பதியருக்கு ஜூலை 6 1901-ம் ஆண்டில் பிறந்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருபதாவது;-

தஞ்சாவூர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில், பல்வேறு இயக்கங்கள் மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், நாட்டின் முன்னேற்றத்திலும் தேசிய நீரோட்டத்திலும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும், தேசப்பற்று உணர்வின் அடிப்படையிலும், இன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

பிறந்தநாள்

இந்த இணைப்பு நிகழ்வில் டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி 125 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அவருடைய உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

மேலும் தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி மற்றும் பிரச்சார பிரிவு மாநில அமைப்பாளர் டி.எஸ்.பாண்டியராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com