

சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 2016, 2021 தேர்தல்களை விட அதிகமாக 83.7% வாக்குகள் பதிவானாலும், எண்ணிக்கை அடிப்படையில் இரு தேர்தல்களை விட குறைவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு 39.75லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 61.2 ஆகும்.
2021-ம் ஆண்டு 40.04லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 24.16 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 60 ஆகும்.
2026-ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு 28.30 லட்சம் என இருந்த மொத்த வாக்காளர்களில் 23.69 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் சதவீதம் 83.7 ஆகும்.