முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா

களத்தூரில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழாநடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா
Published on

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் ராஜா திருநாவுக்கரசு முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2005-2006-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அப்போது முன்னாள் மாணவர்கள் தங்கள் மாணவர் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவுப் படுத்தி பேசினர். பின்னர் தங்கள் வாழ்வில் நடந்த அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

முன்னாள் ஆசிரியர்கள் சார்பில் படிப்பின் முக்கியத்துவம், மற்றும் தேர்வு எதிர்கொள்வது குறித்தும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு பிரிண்டர் மற்றும் டேபிள் ஆகியவைகளை நினைவு பரிசாக வழங்கினர் .இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com