முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1987-ம்ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கவுரவிக்கும் விதமாக மலரும் நினைவுகள் எனும் தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 1987-ம் ஆண்டில் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

அவர்களுக்கு மலர் தூவி, மாலை அணிவித்து வரவேற்றனர். பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பள்ளி பருவ நினைவுகளை ஆசிரியர்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதே போல, வறுமையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களின் படிப்பிற்கு முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் உதவி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com