முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மாஞ்சோலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

அம்பை:

மாஞ்சோலையில் உள்ள பி.பி.டி.சி. தொடக்கப்பள்ளியில் 1993-ம் ஆண்டு 5-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 40 மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் சிறுவயதில் சுற்றித் திரிந்த தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் சுற்றிப் பார்த்து கடந்த கால நிகழ்வுகளை மீட்டெடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாஞ்சோலை தேயிலை தோட்ட ஆலையில் மின்னாளராக பணிபுரியும் சீலன் செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com