முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குற்றாலத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

தென்காசி:

மாதாபட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1999-2000-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்த மாணவர்கள் 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி குற்றாலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, பள்ளி பருவ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் விருந்து மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. இந்த சந்திப்பின்போது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டு ஏழ்மை நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர்களையும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com