

கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை பிளஸ்-2 உயிரியல், கணிதப்பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சுமார் 42 வருடங்களுக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பில் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
தங்களது குடும்பத்தினர், குழந்தைகள், பேரன் பேத்திகள் ஆகியோர் குறித்து நலம் விசாரித்தனர். தற்போதைய வாழ்க்கை முறை, ஆரேக்கியமான வாழ்வு ஆகியவை குறித்தும் விவாதித்தனர்.
மதுரை ஹிஜ்ரா பிளாஸ்டிக் ஷாஜகான், ஓமன் அரசு சிமெண்டு நிறுவன முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் பொன்மாரி, சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியை கேல்டன் எபனேசர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தின் புதுடெல்லி பிரதிநிதி என்ஜினீயர் சாந்தி, சிங்கிலிப்பட்டி இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியை காந்திமதி, கடையநல்லூர் சங்கரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரகுமார் ஆசிரியர் ஹரிஹரன், என்ஜினீயர் அப்துல் ஜப்பார், ராசுப்பாண்டி, கலந்தர் மீரான் மைதீன், அப்துல் பாசித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.