முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக் தலைமை தாங்கினார். செயலர் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளரும், வரலாற்று துறை தலைவருமான ஆண்ட்ரூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், முன்னாள் திருமண்டல லே செயலாளர் வேதநாயகம், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், தாசில்தார் கந்தசாமி, ஆடிட்டர் வள்ளிநாயகம், நாசரேத் மர்காசியஸ் கல்லூரி முதல்வர் ஜவஹர் சாமுவேல், ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி செல்லத்துரை, முன்னாள் கல்லூரி முதல்வர்கள் ஜேக்கப், மறைக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது கல்லூரி பருவ காலத்தில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com