முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சாத்தான்குளம் அருகே முதலூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் டி.என்.டி.டி.ஏ. தூயமிகாவேல் மேல்நிலைப்பள்ளியில் 1985-ம் ஆண்டில் இருந்து 92-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான ரவிக்குமார் வரவேற்றார். இதில் முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை அழைத்து கவுரவித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மாணவர் ஜாண்சன், உடற்கல்வி ஆசிரியர் ஜான்ஜெபச்செல்வன், முன்னாள் மாணவர்கள் செல்லப்பா, அருள்ஜஸ்டின்ராஜ் தேவசித்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் நினைவாக பள்ளிக்கு 16 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கினர். கண்காணிப்பு கேரமா அறையை முதலூர் சேகர குருவானவர் ஏசுவடியான் துரைச்சாமி ஜெபித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தியும், பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் ஸ்டாலின் புஷ்பராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com