முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

ஏரல்:

ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை டி.என்.டி.டி.ஏ. தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 2002-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும், 20 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் தாமஸ் ஜெபத்துரை தொகுத்து வழங்கினார். பண்ணைவிளை சேகர குரு ஜாண் வெஸ்லி ஜெபித்து தொடங்கி வைத்தார். பின்னர் முன்னாள் மாணவர்கள் அனித்தா, பராசக்தி, கிருபா ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அனைத்து மாணவர்களும் இணைந்து ஆசிரியர்களை கவுரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசும் வழங்கினர். முன்னாள் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் நினைவு பரிசை வழங்கினார். முன்னாள் மாணவர் ஞானகுரு நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆல்பர்ட், ஜாக்சன் ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் தாமஸ் ஜெபத்துரை, வெள்ளைதுரை, பத்திரகாளி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com