முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1972-73 -ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளி செயலாளர் கோவிந்த ராஜுலு மற்றும் பள்ளியில் அப்போது பணியாற்றிய ஆசிரியர்கள், 32 பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். பள்ளி செயலாளர், ஆசிரியர்களுக்கு அந்தமான் ராமகிருஷ்ணன், ராஜகோபால், தொழில் அதிபர் சீனிவாசன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கந்தசாமி என்ற வேலு, கதிரேசன், குருசாமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தங்கள் பள்ளிகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். டாக்டர் அனுசுயா ஜெகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com