முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தாயில்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

தாயில்பட்டி,

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளியில் 2003-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் 20 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் தங்கள் நண்பர்களையும், தங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் சந்தித்து பள்ளிக்கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு நூலகம் அமைக்க 300 புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு நன்றி கூறி நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com