

மயிலம்:
மயிலம் ஸ்ரீமத்சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 1993-96-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, முன்னாள் கல்லூரி முதல்வர் லட்சாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-பட்ட சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். முன்னாள் மாணவர்களான நல்லாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சுதா, விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் முருகதாஸ், அருள்மொழி, அனந்தராமன், நந்தகுமார், துரை, கோபால் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னால் மாணவியான திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் விஜயகுமாரி நன்றி கூறினார்.