முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Published on

கலசபாக்கம்

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986-87-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவிகள் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமைஆசிரியை சசிகலைகுமாரி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக இயற்கை உணவை ஆதரித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பள்ளி கால நினைவலைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களை கவுரவப்படுத்துதல் மற்றும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com