விசிகவில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு - திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி இருவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் விவாதமானது.

இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்கி திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com