பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து செவ்வாடை அணிந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com