

சென்னை,
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
மதங்களைக் கடந்த மாமனிதர், மனங்களை நேசித்த மாண்புக்குரியவர், நமக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்.
அன்பு, அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க பாரத ரத்னா அண்ணல் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவர் தேசத்திற்காக ஆற்றிய நற்பணிகளை நினைவு கூறுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.