அம்பேத்கர் நினைவுநாள்: ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்- முதல் அமைச்சர் டுவீட்

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதல் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
அம்பேத்கர் நினைவுநாள்: ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்- முதல் அமைச்சர் டுவீட்
Published on

சென்னை,

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது,

"ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்: சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்:

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்."

இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com