

சென்னை,
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் 2026-27: உண்மை நிலவரம் என்ன? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தற்போதைய நிலவரம்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் 2026-27 - நிலவரம் சமூகநீதித் துறை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான தற்போதைய நிலவரம்.
இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு (2026-27) மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 201 மாணவர்கள் ஜனவரி / மார்ச் 2027-க்குள் சேர உள்ளனர்.
சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக நிதிகேட்பு விவரங்களுடன் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் இவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.30.24 கோடி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 56 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இதுவரை 25 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. எனவே, அம்மாணவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறார்கள்..
கல்விக் கட்டணம் விடுவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகக் கணக்கிற்கு நேரடியாக மொத்த ரூ.36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம். விடுதிக் கட்டணம். வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.
அனைத்து உதவித்தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் வாயிலாக செயலாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.