அம்பேத்கர் பிறந்தநாள்: தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமத்துவ நாள்' ஆகக் கொண்டாடி வருகிறது.
அம்பேத்கர் பிறந்தநாள்: தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

தூத்துக்குடி,

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷு மகாஜன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூக சீர்திருத்தவாதி, சட்ட வல்லுநர் மற்றும் பொருளாதார நிபுணரான பி.ஆர்.அம்பேத்கர் (ஏப்ரல் 14, 1891- டிசம்பர் 6, 1956), ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பை உருவாக்கிய இவருக்கு, 1990-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

சாதிப் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைக்க பாடுபட்ட அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதியை, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமத்துவ நாள்' ஆகக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் விஷு மகாஜன் சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க, அலுவலர்கள் அதனை திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com