சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி

சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி
Published on

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது.

அம்புசேர்வை நிகழ்ச்சி

நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 15-ந் தேதி 9 சாமிக்கு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கடந்த 9 நாட்களாக தினமும் ஒரு அம்பாள் அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நவராத்திரியின் 10-வது நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அம்புசேர்வை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலையில் அசுரனை வதம் செய்வதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

அசுரன் வதம்

அப்போது வள்ளி- தெய்வானை ஆகியோர் சப்பரத்தில் உடன் வந்தனர். சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர். அங்கு முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது. இதையடுத்துஉற்சாக மிகுதியில் முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்தார். பின்னர் மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் சகடை தேரில் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com