டிப்பர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்; பெண் மருத்துவ உதவியாளர் படுகாயம்

விருத்தாசலம் அருகே டிப்பர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்; பெண் மருத்துவ உதவியாளர் படுகாயம் அடைந்தனா.
டிப்பர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்; பெண் மருத்துவ உதவியாளர் படுகாயம்
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, 108 ஆம்புலன்ஸ் ஒன்று விருத்தாசலம் நோக்கி புறப்பட்டது. ஆம்புலன்சை புவனகிரி அடுத்த பெரிய நற்குணம் கிராமத்தை சேர்ந்த வீரத்தமிழன் (வயது 27) என்பவர் ஓட்டினார். அவருடன் மருத்துவ உதவியாளாரான விருத்தாசலத்தை சேர்ந்த பொன்னரசி (36) என்பவர் பணியில் இருந்தார். விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை புறவழிச்சாலையில் சென்றபோது, ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் முன்பகுதியில் அமர்ந்திருந்த மருத்துவ உதவியாளர் பொன்னரசி பலத்த காயமடைந்தார். டிரைவர் வீரத்தமிழனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக விபத்துக்குள்ளான 2 வாகனங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com