ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திண்டிவனத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த வீடுர் பகுதியை சேர்ந்தவர் திருவிநாயகமுருகன் (வயது 34). 108 ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனை மெயின் கேட்டின் அருகில் ஆம்புலன்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென ஆம்புலன்சை வழிமறித்து அதில் வந்த திருவிநாயக முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரையும், அவருடன் வந்த சரண்ராஜ் என்பவரையும் தாக்கினர். மேலும் ஆம்புலன்சின் முன்பக்க கண்ணாடியை இரும்பு பைப்பால் அடித்து உடைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அஜித், பிரபா, வேலு ஆகிய 3 பேர் மீது ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com