

சென்னை,
சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்ததற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய - சீன உச்சிமாநாடு தனக்கும், சீன அதிபருக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. சீன அதிபர் வருகையின்போது தந்த வரவேற்பும், அன்பான உபசரிப்பும், நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒரு சேர பிரதிபலித்தது. மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக மக்களுக்கும், கலாச்சார, சமூக, அரசியல் சீரமைப்புகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் தன்னுடைய பாராட்டுகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.