ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை


ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 11 April 2025 12:29 PM IST (Updated: 11 April 2025 12:30 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.

சென்னை,

தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் கால் பதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக அரசியல் வியூகம் குறித்தும், பாஜக தலைவர் தேர்வு, பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித்ஷா உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார். மாலையில்தான் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா செல்வார் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. சுமார் பிற்பகல் 1.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் அமித்ஷா. 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story