மத்திய தொழிற்பாதுகாப்புப்படை ஆண்டு விழா; உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்பு

மத்திய தொழிற்பாதுகாப்புப்படை ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை
மத்திய ஆயுத போலீஸ் படைப்பிரிவில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையும் ஒன்றாகும். இந்த பாதுகாப்புப்படை நாட்டின் முக்கிய அரசு, தனியார் அமைப்புகள், நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ராஜாதித்யன் சோழன் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தொழிற்பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story






