ஜூலை 2-ஆவது வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் மாற்றமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜூலை 2-ஆவது வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டமன்ற தோல்விக்கு பிறகு மத்திய மந்திரி அமித்ஷா ஜூலை 2-ஆவது வாரத்தில் சென்னை வருகிறார். அதன்பின்பு, தமிழக பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா வருகை

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் இந்த வருகையால் தமிழக பாஜக தலைவர் மாற்றமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்காகத்தான் மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருகிறார் எனவும் தகவல் தெரிவிக்கின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com