அம்மா இருசக்கர வாகன திட்டம்: விண்ணப்பிக்க 10-ந் தேதி வரை காலநீட்டிப்பு

50 சதவீத மானியத்துடன் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க 10-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மா இருசக்கர வாகன திட்டம்: விண்ணப்பிக்க 10-ந் தேதி வரை காலநீட்டிப்பு
Published on

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெண்கள் தங்களின் பணியிடங்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், இருசக்கர வாகனங்கள் வழங்க 50 சதவீத மானியம் வழங்கும் முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த திட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 5-ந் தேதிவரை பெறப்பட்டன. மாவட்ட வாரியாக அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் 2,954, கோவை 11,023, கடலூர் 2,045, சென்னை 22,963, தர்மபுரி 4,874, திண்டுக்கல் 6,279, ஈரோடு 11,691, காஞ்சீபுரம் 3,150, கன்னியாகுமரி 3,454, கரூர் 4,522 கிருஷ்ணகிரி 4,875, மதுரை 7,395, நாகை 4,579, நாமக்கல் 10,074, நீலகிரி 1,819, பெரம்பலூர் 2,474, புதுக்கோட்டை 3,981, ராமநாதபுரம் 1,370, சேலம் 3,634, சிவகங்கை 2,106, தஞ்சாவூர் 1,478, தேனி 1,130, திருப்பூர் 10,655, திருவள்ளூர் 4,360, திருவாரூர் 3,332, தூத்துக்குடி 7,238, நெல்லை 9,173, திருச்சி 1,897, திருவண்ணாமலை 6,653, வேலூர் 3,910, விழுப்புரம் 3,186, விருதுநகர் 6,404 என தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 678 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த திட்டம் பெண்களின் பெருவாரியான ஆதரவை பெற்றுள்ளது. மேலும், அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாளை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்றுக்கொள்கிறது. அதன்படி, அம்மா இருசக்கர வாகனங்களை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நாளை வருகிற 10-ந் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com