அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு
Published on

சென்னை,

பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களினால், 2019-2020-ம் ஆண்டில் 1,04,795 நபர்கள் பயனடைந்துள்ளனர். பட்ஜெட்டில், பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக, ரூ.726.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், வரும் ஆண்டிலும் ரூ.253.14 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்கும்.

சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சீபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடத்திலும், மொத்தம் 13 இடங்களிலும் இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

வரவு-செலவு திட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின் படி, இந்த ஆண்டில் மகளிர் நல திட்டங்களுக்காக மொத்தம் ரூ.78,796.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com