முண்டக கன்னி அம்மன் கோவிலில் ஆடி விழா

கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை முண்டக கன்னி அம்மன் கோவிலில் ஆடி விழா நடந்தது.
முண்டக கன்னி அம்மன் கோவிலில் ஆடி விழா
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை யோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி ஆடி 1-ந் தேதி சிறப்பு அலங்காரத்தில் முண்டக கன்னி அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை முண்டக கன்னி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 24-ந் தேதி அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி கரக ஊர்வலமும் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com