அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு பூஜை, அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

இதேபோல ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் பூஜைகள் நடந்தன.

அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com