அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கோவில் வளாகத்தில் சப்தகன்னி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தன.

அதேபோல், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில், புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com