அம்மாபாளையம் புனித புதுமை மாதா ஆலய தேர்பவனி

அம்மாபாளையம் புனித புதுமை மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.
அம்மாபாளையம் புனித புதுமை மாதா ஆலய தேர்பவனி
Published on

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான 102-வது ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணியளவில் ஆலய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புதுமை மாதா சொரூபம் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் தேர் பவனியாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்திற்கு வந்தடைந்தது. இதில் அம்மாபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆலயத்தில் காலை 8 மணியளவில் பெருவிழாவிற்கான திருப்பலி நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com