பல் பிடுங்கிய விவகாரம்: விசாரணையின் போதே திடீரென அதிரடி உத்தரவு போட்ட அமுதா ஐஏஎஸ்...!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாஉயர்மட்ட விசாரணை நடந்து வரும் அம்பாசமுத்திரம் வட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்த உளவு பிரிவு காவலர்களை வெளியேற்ற அரசு முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டார்.
பல் பிடுங்கிய விவகாரம்: விசாரணையின் போதே திடீரென அதிரடி உத்தரவு போட்ட அமுதா ஐஏஎஸ்...!
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்த நிலையில், உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம் கட்ட விசாரணைக்கு மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ஆஜராகி உள்ளனர். வழக்கறிஞர் துணையுடன் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஜராகி உள்ளனர்.

இதனையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த உளவுப் பிரிவு காவல் துறையினரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெறுவதால் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணை நடக்கும் அலுவலகத்தில் வர தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com