

சென்னை,
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவையாக உள்ளது.
இந்நிலையில், சிறப்பு முகாம் நடத்த இருப்பதால் கூடுதலாக 1 கோடி கொரோனா தடுப்பூசி தேவை என்று கூறி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.