தமிழகம் முழுவதும் நாளை கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் நாளை கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com