தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு

தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு
Published on

சென்னை,

மராட்டிய மாநிலம் மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக ஜனவரி 24-ந்தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

அதன்படி, 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 1, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 2, 3 அடுக்கு எகானமி பெட்டி 1, முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் 4 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com