சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : வேளாண் அமைச்சர்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்
சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : வேளாண் அமைச்சர்
Published on

சென்னை

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;-

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்

வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்.

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்

சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை

என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com