பழமைவாய்ந்த மரத்தில் தீப்பிடித்தது

களக்காடு அருகே பழமைவாய்ந்த மரத்தில் தீப்பிடித்தது.
பழமைவாய்ந்த மரத்தில் தீப்பிடித்தது
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில், களக்காடு-சேரன்மாதேவி சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக ஏராளமான பழமைவாய்ந்த மரங்கள் உள்ளன. அங்குள்ள நாவல் மரம் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமள மரம் முழுவதும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக களக்காடு போலீசாருக்கும், நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரத்தில் தீப்பிடித்தற்கான காரணம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மரத்தின் அருகே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி அதற்கு தீ வைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்றும் அவ்வாறு குப்பைகளுக்கு தீ வைத்தபோது, காற்றின் வேகத்தால் மரத்துக்கு தீ பரவி இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பழமைவாய்ந்த மரம் தீப்பிடித்து கருகியதால் அதை முழுமையாக வெட்டி அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com