

வாடிப்பட்டி,
சமயநல்லூரில் இருந்து நகரி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவில் நகரி பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சமயநல்லூரைச் சேர்ந்த மீனா (வயது46), மலர்வதி (45) மற்றும் கச்சைகட்டி வள்ளியம்மாள் (42), தேனூர் லட்சுமணன் (42) ஆகியோரை ஏற்றிக்கொண்டு சமயநல்லூரை சேர்ந்த டிரைவர் முருகன் (45) ஓட்டி வந்தார்.அந்த ஆட்டோ திடீர் என்று சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் ஆட்டோ மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.