விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலி

விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் உயிழந்தா.
விருத்தாசலத்தில் ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிக்கண்ணன் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் வசித்து வந்தார். இவர் விருத்தாசலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் ரெயிலில்அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விரைந்து சென்று மணிக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணிக்கண்ணன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரெயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com