ஒரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஒரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஒரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (வயது 35). இவர் காஞ்சீபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். பண்ருட்டி கண்டிகை அருகே செல்லும்போது சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com