வேலை பார்த்த கடையிலேயே 6 வெண்கல சிலைகளை திருடிய ஊழியர் கைது

வேலை பார்த்த கடையிலேயே 6 வெண்கல சிலைகளை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலை பார்த்த கடையிலேயே 6 வெண்கல சிலைகளை திருடிய ஊழியர் கைது
Published on

சென்னை மயிலாப்பூர் வடக்குமாட சாலையில் சாமி உலோக சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தியாகராஜன் (வயது 55). இவரது கடையில் ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகோவில் தெருவைச்சேர்ந்த சண்முகம் (56) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகம், கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 6 கிலோ எடையிலான ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 6 வெண்கலம் மற்றும் பித்தளை சிலைகளை திருடி, தான் தங்கி இருக்கும் அறையில் பதுக்கி வைத்துள்ளார்.

இதையறிந்த தியாகராஜன், கடையில் பணியாற்றும் சகஊழியர்கள் உதவியுடன் சண்முகத்தை பிடித்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com